Science questions for today - இன்றைய நாளுக்கான விஞ்ஞான வினாக்கள் | 2021.06.12

நேர்கோட்டு பாதையில் கடைத்தொகுதியை நோக்கி நடக்கும் ஒருவர் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு 200m தூரத்திலுள்ள தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு 30s ல் செல்கின்றார். அங்கு தன் நண்பனையும் கூட்டிக்கொண்டு தொடர்ந்து 12s கள் 30m தூரம் செல்லும் போது தன்னுடைய பணப்பையை மறந்து வீட்டில் வைத்து விட்டதை நண்பன் கூறுகின்றான்.  உடனே திரும்பி மறுபடியும் நண்பனின் வீட்டிற்கு 10s ல் செல்கின்றனர். பணப்பையை எடுத்துக்கொண்டு மீண்டும் 500m தூரம் 100s களில் நடந்து கடைதொகுதியை அடைகின்றனர். அங்கு 120s பொருட்கள் வாங்கியவுடன் மீண்டும் தொடர்ச்சியாக 100s களில் தன்னுடைய வீட்டை அடைகிறார்.

 


இவருடைய இயக்கங்களை சரியாக அவதானித்து பின்வரும் வினாக்களுக்கு விடைத்தருக.


  1. தனது வீட்டிலிருந்து நண்பனின் வீட்டிற்கு உள்ள தூரம் யாது?
  2. தனது இயக்கத்தில் முதல் 52 செக்கன்களில் பயணித்த தூரம் எவ்வளவு?
  3. தனது இயக்கத்தில் முதல் 52 செக்கன்களில் அவரின் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
  4. முதல் 52 செக்கன்களில் அவரது சராசரி கதி எவ்வளவு?
  5. பயணத்தின் இறுதியில் அவரது மொத்த இடப்பெயர்ச்சி எவ்வளவு?
  6. பயணத்தின் இறுதியில் அவரது மொத்த பயண தூரம் எவ்வளவு?

 

தரப்பட்ட வினாக்களுக்கான சரியான விடைகளை மாத்திரம் இலக்கமிட்டு எழுதி 077 5595951 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

No comments:

Post a Comment