உராய்வு விசை (Frictional Force)

 உராய்வு விசை

Friction

பொருளொன்று தளமொன்றுடனோ அல்லது வேறு பொருளொன்றுடனோ தொடுகையுரும் போது உராய்வு விசை ஏற்படுகிறது. 

அவ்வாறு உராய்வு விசை ஏற்பட அப்பொருளினதும் தளத்தினதும் மேற்பரப்பினுடைய தன்மை காரணமாக அமைகின்றது. அத்துடன் அப்பொருளின் செவ்வன் மறுதாக்கமும் காரணமாக அமைகின்றது. 

உராய்வு விசையானது இயக்கமொன்றுக்கு எதிராக அமைவதால் உராய்வு விசை அதிகரிக்கும் போது இயக்கம் குறைவடைகிறது. 

உராய்வு விசை குறைவடையும் போது இயக்கம் அதிகரிக்கின்றது.


அதனடிப்படையினல் உராய்வு விசையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

  • மேற்பரப்பின் தன்மை
  • செவ்வன் மறுதாக்கம்


உராய்வு விசையில் மேற்பரப்பின் தன்மை எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?


  • மேற்பரப்பின் தன்மை கரடுமுரடாக உள்ள போது அவ்விடத்தில் உராய்வு விசை அதிகரிக்கிறது.


உதாரணங்கள்:
1.    எமது பாதணிகளின் அடிப்பகுதி கரடுமுரடாக காணப்படும் பொழுது தரைக்கும் பாதணிக்கும் இடையில் உராய்வு விசை அதிகரிக்கின்றது,  அதனால் தரையின் மீது படும் எமது பாதணி வழுக்குவதில்லை (இயஙகுவதில்லை).


 


2.    வண்டியின் கைப்பிடியில் பிளாஸ்டிக்கிலான தவாளிப்புக்கள் இருப்பதால் மேற்பரப்பு கடினமாகி உராய்வு விசை அதிகரிப்பதனால் அது கையிலிருந்து வழுக்கிச் செல்லாமல் (இயங்காமல்) நிலையாக இருக்கின்றது.



 


  • மேற்பரப்பின் தன்மை ஒப்பமாக உள்ள போது அவ்விடத்தில் உராய்வு விசை குறைகின்றது.


உதாரணங்கள்:
1.    எமது பாதணிகளின் அடிப்பகுதி தேய்ந்து (ஒப்பமாக) காணப்படும் பொழுது தரைக்கும் பாதணிக்கும் இடையில் உராய்வு விசை குறைகின்றது அதனால் தரையின் மீது படும் எமது பாதணி இலகுவாக வழுக்கி செல்கிறது (இயங்குகிறது)


2.    வண்டியின் கைப்பிடியில் பிளாஸ்டிக்கிலான தவாளிப்புக்கள் இல்லாத போது மேற்பரப்பு ஒப்பமாகி உராய்வு விசை குறைவடைவதனால் அது கையிலிருந்து வழுக்கிச் செல்லும் (இயங்கும்)



உராய்வு விசையில் செவ்வன் மறுதாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது?

  • பொதுவாக பொருளொன்றின் நிறை அதிகரிக்கும் பொழுது அதற்கு எதிராக செவ்வன் மறுதாக்கமும் அதிகரிக்கும்.


  • பொருளொன்றின் செவ்வன் மறுதாக்கம் அதிகரிக்கும் போது அதன் மீது உராய்வு விசையும் அதிகரிக்கும்


உதாரணங்கள்:
1.    தரையொன்றின் மீது ஒரு குறித்த அட்டை பெட்டியில் முழுவதுமாக பொருட்கள் உள்ள போது அதை தரை மீது இழுத்தலோ அல்லது தள்ளுதலோ மிக கடினமாக இருக்கும் காரணம் செவ்வன் மறுதாக்கம் அதிகமாக உள்ளதால் உராய்வும் அதிகரிக்கின்றது.


2.    குறித்த ஒரு தரை மேற்பரப்பின் மீது துனியொன்றினை விரித்து அதன் மீது ஒரு நிறை கூடிய (மறுதாக்கம் கூடிய) ஒருவரை அமரச்செய்து இழுக்கும் போது மேற்பரப்புக்களில் உராய்வு அதிகரிக்கும், அதனால் இழுப்பது கடினமாக இருக்கும்.

 

  • பொதுவாக பொருளொன்றின் நிறை குறையும் பொழுது அதற்கு எதிராக செவ்வன் மறுதாக்கமும் குறையும்.


  • பொருளொன்றின் செவ்வன் மறுதாக்கம் குறையும் போது அதன் மீது உராய்வு விசையும் குறையும்.


உதாரணங்கள்:
1.    தரையொன்றின் மீது ஒரு குறித்த அட்டை பெட்டியில் பொருட்கள் எதுவுமில்லாமல் வெறுமையாக உள்ள போது அதை தரை மீது இழுத்தலோ அல்லது தள்ளுதலோ மிக இலகுவாக இருக்கும் காரணம் செவ்வன் மறுதாக்கம் குறைவாக உள்ளதால் உராய்வும் குறைவடைந்துள்ளது.


2.    குறித்த ஒரு தரை மேற்பரப்பின் மீது துனியொன்றினை விரித்து அதன் மீது ஒரு நிறை குறைந்த (மறுதாக்கம் குறைந்த) ஒருவரை அமரச்செய்து இழுக்கும் போது மேற்பரப்புக்களில் உராய்வு குறைவாகும்,  அதனால் இழுப்பது இலகுவாக இருக்கும்.

  • மாணவர்கள் இக்கட்டுரையை வாசித்து விளங்கிக்கொண்ட பின்னர் உராய்வு தொடர்பான சில சோதனைகளை செய்து முயற்சித்து பாருங்கள்.


பின்வரும் வினாக்களுக்கு விடைத்தருக.


1.    வாகனம் ஒன்றின் டயர்களில் தவாளிப்புக்கள் உள்ள போது தரைக்கும் டயருக்கும் இடையில் உராய்வு எவ்வாறு காணப்படும்?


2.    உராய்வு விசையை குறைப்பதற்காக அன்றாட வாழ்வில் எப்பதார்த்தங்களை பயன்படுத்துகின்றோம்?


3.    மேற்பரப்புக்களுக்கிடையில் உராய்வு விசையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள் எவை?


(இவ்வினாக்களுக்கான விடையை மாணவர்கள் எழுதி எமக்கு ஊடாகவும் அனுப்பலாம்)

இது தொடர்பான வீடியோ விளக்கங்கள் https://kalkiacademy.blogspot.com இல் பதிவிடப்படும்.


No comments:

Post a Comment