தூரமும் இடப்பெயர்ச்சியும்
- துணிக்கையொன்று தனது பயணத்தின் போது சென்ற பாதையின் நீளமானது அத்துணிக்கை இயங்கிய தூரமாக கருதப்படுகிறது.
- பயணமொன்றில் துணிக்கையின் ஆரம்ப இடத்திலிருந்து துணிக்கை தற்போதுள்ள இடத்திற்கு இடையிலான மிக கிட்டிய நீளம் அத்துணிக்கையின் இடப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது.
மேலே படத்தின் உதவியுடன் இவற்றை மிக தெளிவாக விளங்கிக்கொள்ளலாம் அதாவது வீட்டிலிருந்து (A) தபாற்கந்தோர் (C) யிட்க்கு செல்வதற்கான பாதை கருப்பு நிற கோட்டில் காட்டப்பட்டுள்ளது.
A யிலிருந்து C இக்கான மிக கிட்டிய தூரம் சிவப்பு நிற புள்ளிக்கோட்டில் காட்டப்பட்டுள்ளது.
எனவே வீட்டிலிருந்து தபாற்கந்தோருக்கு செல்லும் பாதையின் நீளம் 480m ஆகும். இது துணிக்கை இயங்கிய தூரம் எனப்படுகிறது.
வீட்டிலிருந்து தபாற்கந்தோருக்கான கிட்டிய நீளம் 400m ஆகும். இது அத்துணிக்கையின் இடப்பெயர்ச்சி எனப்படுகிறது.
- எப்பொழுதும் கிட்டிய தூரம் (இடப்பெயர்ச்சி) ஒரு நேர் கோடாகவே காணப்படும். அதனால்தான் உருவிலுள்ள இடப்பெயர்ச்சியை குறிக்கும் சிவப்பு நிற புள்ளி கோடுகளனைத்தும் நேர் கோடுகளாக காணப்படுகிறது.
தற்போது இந்த விளக்கம் தெளிவாகிவிட்டதென்றால் பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதி பாருங்கள் அல்லது 0773853988 என்ற WhatsApp இலக்கத்துக்கு விடையெழுதி அனுப்புங்கள்.
1. வீட்டிலிருந்து பாடசாலைக்கான தூரம் யாது?
2. வீட்டிலிருந்து பாடசாலைக்கான இடப்பெயர்ச்சி யாது?
3. வீட்டிலிருந்து சிறுவர் பூங்காவுக்கான தூரம் யாது?
4. வீட்டிலிருந்து சிறுவர் பூங்காவுக்கான இடப்பெயர்ச்சி யாது?5. D யிலிருந்து B இட்காண தூரம் யாது?
- J.Thasaradhan -
No comments:
Post a Comment