மனித இதயம் - Human heart - Kalki academy - J.Thasaradhan


இதயம் என்பது எமது ஒரு கைப்பிடி  அளவுள்ள ஒரு தசை உறுப்பு ஆகும், இது மார்பகத்திற்கு சற்று பின்னால் மற்றும் சற்று இடதுபுறத்தில் எமது விலா என்புகளின் பாதுகாப்பில் அமைந்துள்ளது.



மனிதனின் இதயம் நான்கு அறைகளை கொண்டுள்ளது. அவை பின்வரும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

  • வலது சோனையறை
  • வலது இதயவறை
  • இடது சோனையறை
  • இடது இதயவறை

இதயம் எவ்வாறு தொழிற்படுகின்றது என்பது பற்றி தெரியுமா?

  • முதலில் உடலில் உள்ள அசுத்தமான குருதிகள் அனைத்தும் நாளங்களின் வழியே வலது சோனையறையை வந்தடையும்.

  • வலது சோனையறை முழுமையாக குருதியால் நிறைந்தபின் அங்கிருந்து வலது இதயவறைக்குள் முழுமையாக செல்லும்.

  • வலது இதயவறையிலிருந்து ஒட்சிசனை பெற்றுக்கொள்வதற்காக சுவாச தொகுதியை நோக்கி குருதி செல்லும்.

  • ஒட்சிசன் பெற்றுக்கொண்ட குருதி சுவாச தொகுதியிலிருந்து இடது சோனையறையை வந்தடையும்.

  • இடது சோனையறையிலிருந்து இடது இதயவறையை நோக்கி செல்லும்.

  • இடது இதயவறையிலிருந்து உடலின் எல்லா பகுதிக்கும் குருதி செலுத்தப்படும்.

விளக்கம்
ஜெ.தசரதன்
கல்கி கல்வியகம்

No comments:

Post a Comment