விஞ்ஞான பாடத்தில் அமைப்பு கட்டுரை வினாக்களுக்கு எவ்வாறு விடையளிக்கலாம்?
Note: ஒவ்வொரு வினாக்களையும் முதலில் நன்றாக வாசித்து அதற்கான விடையை உங்களது கொப்பிகளில் எழுதியபின்ன்ர் Show answer Buttonஐ கிளிக் செய்து உங்களது விடை சரியா என பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
A) நீர்
எமக்கு பல வழிகளில் உதவுகின்றது.
இதனை பாதுகாப்பது உமது கடமையாகும். அன்மைகாலத்தில்
யாழ்பானத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகின்றது.
1. நீர் மாசடையும் வழிகள் எவை?
2. நீரின்
பண்பை பாதிக்கும் இரசாயண காரணிகள் மூன்றை பெயரிடுக?
3. நீரின்
BOD என்பதன் கருத்து யாது?
4. யாழ்ப்பான
நிலத்தடி நீரில் கலந்துள்ள இரசாயனகூறு எது?
B) நீர்
நிலைகளில் பல்வேறு உயிரினங்களை மாணவர்கள் அவதானித்தனர்.
1. மாணவர்கள் அவதானித்த அங்கிகளின் பிரதான பாகுபாட்டு மட்டங்கள் மூன்றினை குறிப்பிடுக.
2. அல்காக்கள்
இப்பிரதான பாகுப்பாட்டில் எதில் அடங்குகின்றது?
3. நீரினுள்
பல்லாண்டு வாழும் இயல்பை கொண்டுள்ள மீன் ஒன்றை எழுதுக.
அது கொண்டுள்ள இசைவாக்கம் யாது?
4. படகில்
உள்ள மனிதர் துடுப்பினால் நீரை வலிக்கும் போது
நியூற்றனின் எவ்விதிக்கு அமைய அது தொழிற்படுகின்றது?
5. படகானது
நீரினுள் அமிழாதிருப்பதற்கு படகினது மொத்த நிறைக்கும் நீரின் மேலுதைப்பிற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது?
6. படகின்
மொத்த திணிவு 500kg எனின் அதன் நிறை யாது?
7. படகினால்
இடம்பெயர்க்கப்படும் நீரின் நிறை யாது?
8. இடம்பெயர்க்கப்படும்
நீரின் கனவளவை காண்க? (நீரின் அடர்த்தி = 1000kgm-3)
விடைகள்
A)
1. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், நீருடன் சேறும் எண்ணெய்கழிவுகள் மூலமாக
2. நீரின் அமிலத்தன்மை, செறிவு, நீரில் கரைந்துள்ள ஒட்சீசனின் அளவு
3. நீரில் அடங்கியுள்ள ஒட்சிசனின் அளவு
4. நைதரசன்
B)
1. பக்ரீரியா, ஆர்க்கியா, இயூக்கரியா
1. பக்ரீரியா, ஆர்க்கியா, இயூக்கரியா
2. இயூக்கரியா
3. காவ்யா, மகுரா
சேற்றினுள் புதைந்து வாழ்வதனால் இறக்காது உயிர்வாழ முடிகிறது.4. நியூற்றனின் மூன்றாம் விதி
5. படகினது மொத்த நிறையும் மேலுதைப்பிற்கு சமனாக அமையும்.
6. 5000N
7. 5000N
8. 0.5m3
No comments:
Post a Comment